இளமையாக இருக்க சுவிஸ் மக்கள் மேற்கொள்ளப்படும் புதிய சிகிச்சை கேட்பவர்களுக்கு அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டு மக்கள் வயதை குறைக்க விலங்குகளின் செல்களை எடுத்து ஊசி மூலம் செலுத்தும் சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும் சுமார் 35 மருத்துவமனைகளில் இதுபோன்ற அனுமதி பெறாத சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
தகவலை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய சுவிஸ் மருத்துவ துறை அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
ஆடு, மாடு அல்லது பன்றியின் வயிற்றில் கருவாகியுள்ள குட்டியின் செல்களை சேகரித்து அவற்றை வயதை குறைக்க விரும்புவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்துவார்கள்.
இந்தச் சிகிச்சை வயதை குறைப்பது மட்டுமில்லாமல் ஒற்றைத்தலைவலி மற்றும் புற்றுநோயைக் கூட குணப்படுத்தும் என சிகிச்சை அளிப்பவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சுவிஸ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனைகளில் குவிந்து மில்லியன் கணக்கில் யூரோக்களை செலவு செய்ய தொடங்கினர்.
ஆனால், விலங்குகள் செல் சிகிச்சை ஒரு ஏமாற்று வேலை என்றும் அந்த சிகிச்சையால் இரத்த தொற்று நோய்கள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், விலங்குகள் செல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்