கடந்த 132 ஆண்டுகளுக்கு பின் போத்தல் ஒன்றிற்குள் வைத்து கடலில் வீசப்பட்ட போத்தல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியை சேர்ந்த படகோட்டி பார்க் பவுலா என்பவர் தனது கையால் எழுதிய போத்தல் ஒன்றினுள் வைத்து கடலினுள் விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1886 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 12 ஆம் திகதிp இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 48 ஆயிரம் நாட்கள் கடலில் மிதந்து வந்த இந்த போத்தல் கடிதம், கடந்த சில நாட்களுக்கு முன் அவுஸ்ரேலியா கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கடற்கரை வழியாக சென்ற டோன்ஜா இல்மேன் என்ற பெண் கண்டெடுத்து பிரித்து படித்துள்ளார்.
இதனுள் இருந்த கடிதத்தில் கடலினுள் காணப்படும் நீரோட்டம் குறித்தும், கார்டிப்பில் தொடங்கிய தங்களது பயணம், இந்தோனேசியா வரை சென்றதாக, ஜேர்மனிய மொழியில் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே 108 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது 132 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ள