சீனாவில் 68 வயதிலும் 20 வயது இளைஞன் போன்று தோற்றமளிக்கும் நபரின் ரகசியங்களை தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் ஹீ ஹாய் என்பவர் 1950 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் சமீபத்தில் முதியவர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் இவரின் இளமை தோற்றத்தை பார்த்து, இவர் எதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இவர் தனது
வயதை தெரிவித்துள்ளதுடன், அன்று முதல் பிரபலமடைந்துள்ளார். மேலும் மிக நவீன தாத்தா என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.
இதனடிப்படையில் அவர் தனது இளமை குறித்து கூறியுள்ளதாவது, உடலை நல்ல வடிவத்தோடு வைத்திருப்பதற்காக யோகா பயிற்சியில் ஈடுபடுவதாகவும், தியானம் செய்வதாகவும், அதை விட தினமும் 30 நிமிடங்கள் படியில் ஏறி இறங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதைவிட தான் சில மருந்து வகைகளையும் எடுத்து கொள்வதாகவும், சில சத்தான உணவுகளையும் எடுத்து கொள்வதால், தனது தோற்றம் 60 வயதிலும் 20 வயது போன்று காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.