ரஷ்யா முன்னாள் உளவாளிக்கு விசம் ஏற்றி கொல்ல முயன்றதாக கூறிய விளக்கம், திருப்தி அளிக்காததால் 23 நாடுகளின் தூதர்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.
ரஷ்யா உளவுத்துறையில் பணியாற்றி, இங்கிலாந்திற்கு ரஷ்யா உளவாளிகளை காட்டி கொடுத்ததால், செர்ஜய் ஸ்கிர்பால் கடந்த 2004 ஆம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 13 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஸ்கிர்பாலை, 2010 ஆம் ஆண்டு மீட்டு பிரிட்டன் தஞ்சம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் பிரிட்டனில் வசித்து வந்த ஸ்கிர்பாலுக்கும், அவரது மகளுக்கும் கடந்த 4 ஆம் திகதி இனந்தெரியாதவர்கள் விசமருந்து தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு ரஷ்யா அரசு தான் காரணம் என பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு, ஐரோப்பா யூனியன் நாடுகளின் தூதர்களுக்கு ரஷ்யா சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் நேற்று ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும், அதனில் அங்கம் வகிக்காத நாடுகள் சிலவற்றும் விளக்கம் அளிக்கும் கூட்டம், மாஸ்கோவில் உள்ள ரஷ்யா தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் விளக்கம் அளிக்கும் கூட்டம் திருப்தி அளிக்காததால், 23 நாடுகளை சேர்ந்த தூதுவர்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.