நேற்று நடந்த முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார பேட்டிங்கால் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்தியது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின.
இந்த போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியாவின் கனவை தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் நினைவாக்கினார். கடைசி ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் கார்த்திக் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
தினேஷ் கார்த்திக் மொத்தம் எதிர் கொண்ட 8 பந்தில் 3 சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசி 28 ரன்கள் குவித்தார். டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய முதல் வீரர் என்ற பெருமையை கார்த்திக் பெற்றுள்ளார்.