தமிழர் விடுதலை கூட்டணியின் ஆனந்தசங்கரியை விடவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆபத்தானவர் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா, கூறியுள்ளார்.
கூட்மைப்புடன் பேசுவதும், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசுவதும் இப்போதைக்கு ஒன்றுதான். எனவும் கூறியிருக்கிறார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இன்பராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
ஆனந்தசங்கரி கூட எம்முடன் ஒரு மணிநேரம் பேசுவார் எமது கருத்தை உள்வாங்குவார் ஆனால் சம்பந்தனிடம் தமிழ் விடுதலை புலிகள் கட்சி என்றோ அல்லது போராளிகள் என்றோ யாரும் போய் கதைக்கட்டும் பார்போம் அது சாத்தியமற்றதாகவே இருக்கும்.
இதை புலம்பெயர் நண்பர்களிடம் தெரிவித்தால் என்ன செய்வது அவர் பிழை விட்டால் இன்னும் குறுகிய காலத்தில் இறந்து விடுவார் என்று கூறுகின்றனர்.
நாம் இறந்தாலும் அவர் இறக்கமாட்டார். இரத்தம் மாற்றுகிறார் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்.
அதி முக்கிய நபர் என்ற வாழ்ககை வாழ்கிறார் சம்பந்தன். வருங்காலத்தில் நாம் யாருடனும் கூட்டு சேராமல் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.
2008 ஆம் ஆண்டு மன்னாரில் யுத்தம் இடம்பெற்ற போது 23 பாராளுமன்ற உறுப்பினர்களையும் புதுக்குடியிருப்பில் கொண்டுபோய் வைத்திருக்க வேண்டும்.
தலைக்கு மேல் செல் வெடிச்சு தலையில மண்ணோட பங்கருக்குள் இருந்து வந்திருந்தால் தெரியும் அதன் கஸ்டம் எமது வலி.
அந்த விசயத்தில் நமது தலைமை பீடம் பிழை விட்டுவிட்டது. இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று கூற முடியாது அந்தளவிற்கு இவர்களின் செயற்பாடு உள்ளது.
யுத்த காலத்தில் இவர்கள் கொழும்பில் இருந்தமையினால் எங்கள் கஸ்டம் எங்கள் வலி தெரிவதில்லை.
இவர்களை வெளியில் விடாது வன்னிக்குள் வைத்திருந்தால் தான் வீட்டுக்கொரு போராளி கட்டாயம் என்றபோது வலி தெரிஞ்சிருக்கும்.
மேலும் போராட்டத்திற்கு வலுக்காட்டயமாக போராளிகளை சேர்த்ததைக் கதைக்கிறார்கள் எம் இனத்திற்கான போராட்டத்தில் எங்கள் தேசம் அழியும் போது எமது மக்களை சேர்த்து போராடாமல் சிங்கள மக்களை பிடித்து சென்றா போராடுவது.
இல்லை முஸ்லிம் மக்களை பிடித்துச் சென்றா போராடுவது? யுத்த நடக்கும் போது இலங்கை அரசு இராணுவத்தில் இருந்து ஓடினவர்களை கொண்டுவந்துதான் வன்னியை பிடித்தார்கள்.
இதுவெல்லாம் இவர்களுக்கு தெரியுமா தெரியாதா என்றும் கேள்வியெழுப்பினார்.