01-04-2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 18ம் திகதி,ரஜப்13ம்திகதி,1.4.18 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி மாலை 5:56 வரை
அதன் பின் துவிதியை திதி, அஸ்தம் நட்சத்திரம் காலை 6:26 வரை அதன்பின்; சித்திரை நட்சத்திரம், அமிர்;த,சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
குளிகை : மதியம் 3:00-4:30 மணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
பொது : சூரியன் வழிபாடு.
மேஷம்:
நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
ரிஷபம்:
எதிர்பாராத சிரமம் பற்றி மனம் வருந்த வேண்டாம். நியாயத்தை பின்பற்றுவதால் நன்மை உருவாகும். தொழில், வியாபாரத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும். பிறர் பார்வையில் தெரியும்படி பணச்செலவு செய்வதை தவிர்க்கவும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.
மிதுனம்:
சுற்றுப்புற சூழ்நிலையின் தாக்கம் தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற வாய்ப்பை பாதுகாப்பது நல்லது. வருமானம் குறைந்த அளவில் கிடைக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
கடகம் :
பெரியவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவீர்கள். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
சிம்மம் :
உங்களின் நேர்மை எண்ணத்தை நண்பர்கள் பாராட்டுவர். தொழில், வியாபார நடைமுறையில் எதிர்பார்த்த வாய்ப்பு கைகூடும். ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு.
கன்னி:
மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். திட்டமிட்ட செயலில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். உறவினர்களிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும்.
துலாம்:
பிறருக்கு உதவும் போது கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். லாபம் சுமார். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது.
விருச்சிகம் :
திட்டமிட்ட பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணிகளுக்காக மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
தனுசு:
சமயோசிதமாக செயல்பட்டு மற்றவரிடம் பாராட்டு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மகரம்:
எதிர்பாராத சூழ்நிலையால் குழப்பம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. அரசு வகையில் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.
கும்பம்:
இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு மறையும். குடும்பத்தினரின் ஆலோனை வளர்ச்சிக்கு உதவும். தொழிலில் அதிக நேரம் பணிபுரிவீர்கள். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.
மீனம்:
பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். உறவினர் வழியில் எதிர்பாராத நன்மை வந்து சேரும். தொழிலில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். எதிரி தொல்லை மறையும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி பெற வாய்ப்பு கிடைக்கும்.