பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானம் இன்று வெளியிடப்படுமென, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் நிலைமை மற்றும் கட்சி ஆகியவற்றை கருத்திற்கொண்டே முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் பலர் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்தாகுமென்றும் துமிந்த இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறெனினும், தமது கட்சியின் ஆதரவின்றி நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கவோ வெற்றி பெற செய்யவோ முடியாதென துமிந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்