ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அண்மையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு மிக நீண்ட நேரம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்ற வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது எவ்வாறு நடந்து கொள்வது, மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தனக்கு ஆதரவு வழங்க வேண்டுமென பிரதமர், ஜனாதிபதியிடம் கோரியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனது கட்சிசார்பான விடயங்களை இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.