சிவனொளி பாதமலைக்கு தரிசிக்கவந்த 36 பேர் ஒரு தொகை போதைப் பொருளுடன் அட்டன் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்கள் சனிக் கிழமை மாலை வட்டவலை பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து, மோரா மோப்பநாய்களை கொண்டு ஹட்டன் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த 36 சந்தேக நபர்களும் கைது செய்யபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 36 பேர் அதிரடியாகக் கைது; காரணம் இதுதான்!
கைது செய்யப் பட்டவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா, சட்டவிரோதமான சிகரட்டுகள் என்பன கைபற்றப் பட்டுள்ளதோடு, இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 18 – 30 வயதுகளை கொண்ட நபர்கள் எனவும் கொழும்பு, அவிசாவலை, களுத்துறை, மாத்தறை, காலி, ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட 36 சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தப் படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.