Loading...
முகத்தை மூடிக் கட்டிய நால்வர் கொண்ட குழு, இளைஞன் ஒருவரைத் துரத்திச் சென்று வாளால் வெட்டும் கானொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி, சாமியார்தோட்டம் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற இளைஞனை 4 பேர் குழு துரத்திச் சென்றுள்ளது.
ஹரிகிருஷ்ணனை சரமாரியாக வெட்டி விட்டு, பின்னால் வந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுடன் 4 பேரும் ஏறிச் சென்ற காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளன.
Loading...
தகவல் அறிந்த பொலிஸார் தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீட்டு, மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...