யாழ்ப்பாண உணவுகள் எப்போதுமே காரமானதாகவும் உப்பு, புளி கொஞ்சம் அதிகமானதாகவும் இருக்கும். யாழ்ப்பான உணவை ஒருதடவை சாப்பிட்டால் எவராக இருந்தாலும் அவர்கள் அவ்வுணவிற்கு அடிமையாகிவிடுவார்கள். அந்தவகையில் யாழ்ப்பாணத்து ஆட்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரமொன்றில் சிறிது எண்ணெய் விட்டு, கராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன்பின்னர் வதக்கியவற்றுடன் ஆட்டுக்கறிக் கலவையைச் சேர்க்கவும்.
பின்னர் உப்பு, தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கறியில் உள்ள நீர் வற்றியவுடன் மேற்குறிப்பிட்ட வாசனை பொருட்களை சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான யாழ்ப்பாண ஆட்டு வறுவல் தயார்.
கறிக் கலவையை குக்கரில் வேக வைப்பதாக இருந்தால் 7 விசில் வரும் வரை வேகவிட்டு, பின்னர் பாத்திரத்தில் கொட்டி நீர் வற்றியவுடன் மசாலா தூள் சேர்க்கவும்.