இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில், அதனை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடைக்க முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரபாகரன் நாட்டை பிளவு படுத்த முயற்சித்த போது, அதனை தாம் உடைத் தெறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அகுரஸ்ஸ ஹேனேகம ஸ்ரீபோதிராஜ விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,
பிரபாகரனின் செயற்பாடு போன்று ஸ்ரீலங்காவில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும் எதிர்காலத்திலும் அப்படியே வாழ்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த ஒற்றுமையை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடைக்க முற்பட்டதாகவும் நாட்டை பிளவுபடுத்த எண்ணியதாகவும் எனினும் அந்த நிலை இன்று மாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே நிலையயை மீண்டும் யாரேனும் உருவாக்க நினைத்தால் அதற்கு இடம் கொடுக்க முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.