திஹாரி பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
திஹாரி கொழும்பு கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றே நேற்று நள்ளிரவு 1:15 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.
குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்கிரையான வர்த்தக நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.