பாகிஸ்தான் மற்றும் விண்டிஸ் (மேற்கிந்திய தீவுகள்) அணிகளுக்கிடையிலான முதலாவது, ரி-20 போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும், விண்டிஸ் அணிக்கு ஜேசன் மொஹமட்டும் தலைமை தாங்குகின்றனர்.
இப்போட்டியில், பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த வீரர்களும், முன்னணி வீரர்களுமே விளையாடுகின்றனர்.
ஆனால், விண்டிஸ்; அணியில் ஹென்ரி பிளேட்சர், சமுவேல்ஸ், சமுவேல் பத்ரி ஆகிய மூன்று வீரர்களை தவிர, மற்ற அனைத்து வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களே.
ஆகையால், இந்த ஒரு துருப்பை கச்சிதமாக பயன்படுத்தி விண்டிஸ்; அணிக்கு, பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இரு அணிகளும் ரி-20 சம்பியன் அணிகள் என்பதால், வெற்றியை கணிப்பதும் சற்று கடினமான விடயம். எனவே இப்போட்டியின் விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் ஆணித்தனமான உண்மை.