Loading...
மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
சம்பியனை தெரிவு இறுதிபோட்டியில், உலகின் 6ஆம் நிலை வீரரான ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் செவேவ்வும், உலகின் 14ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜோன் இஸ்னரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
அரையிறுதியில் அலெக்சாண்டர் செவேவ், ஸ்பெயின் வீரர் பாப்லோ கார்ரீனோ புஸ்டாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
Loading...
இதேபோல, ஜோன் இஸ்னர் அரையிறுதியில், முன்னணி வீரரான ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை தோற்கடித்து இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றார்.
இதில் இருவீரர்களும் சமபலம் பொருந்திய வீரர்கள் என்பதால், இப்போட்டி நிச்சயமாக இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Loading...