யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க செயலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இன்று காலையில் யாழ். மாவட்ட செயலகத்தில், நல்லிணக்க செயலக அதிகாரிகளுடனுடன் நல்லிணக்க செயலக பயனாளிகளுடனும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியுடன் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ். திண்ணை விடுதியில் யாழ். மாவட்ட மகளிர் அமைப்புகளின் இணையத்தைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதியுடன் மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சர் மங்கள சமரவீர, யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.