இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக 16 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளது.
புத்தளம், ஆராச்சிகட்டு நல்லதரன்கட்டுவ பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, சந்தேக நபரின் காதலி என்பதோடு, சந்தேக நபர் காதலியை பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்து சென்று இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம், கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், சிறுமியின் தாய் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிகட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.