2 ஆம் உலகப்போரின் போது மூழ்கி காணாமல் போன நிலையில் இலங்கை கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய பயணிகள் கப்பல் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கி காணாமல் போன நிலையில், பெரும் போராட்டத்தின் பின்னர் கடலின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
1942 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜப்பானின் விமானத் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் மூழ்கி காணாமல் போனது.
இந்த கப்பலானது திருகோணமலை துறைமுகப் பகுதியில் சுமார் 35 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பல மாதங்களாக இந்த கப்பலை மேற்பரப்பிற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
452 அடி நீளமான குறித்த கப்பலை கடலின் மேற்பரப்பிற்கு கொண்டுவரும் பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், திருகோணமலை பகுதியில் 2 ஆம் உலக போரின் போது ஜப்பானால் வீசப்பட்ட அணுகுண்டு வெடிக்காத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.