Loading...
ராஜ்யசபா எம்.பி. சச்சின் டெண்டுல்கர் தனது முழு சம்பளம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
Loading...
இந்நிலையில் இவர் தற்போது தனது 6 ஆண்டு கால சம்பளம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இவர் அதிகம் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆந்திர மாநிலம் புட்டம் ராஜூ கந்ரிகா என்ற கிராமத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் டோன்ஜா என்ற கிராமத்தையும் சச்சின் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
Loading...