Loading...
கல்கிஸ்ச பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்கிஸ்ச பொலிஸார் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த விபச்சார விடுதியை சுற்றி வளைக்க முடிந்ததாகவும், இதன் போது அங்கிருந்த 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பெண் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஏனைய பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அஹுங்கல்ல, மொரகொல்லாகம, பொரலஸ்கமுவ, களுத்துறை, அழுத்கம பிரதேசத்தை சேர்ந்த 34, 32, 28, 29 வயதுடையவர்களாகும். குறித்த பெண்களை கல்கிஸ்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Loading...