தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டுள்ளதால்அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவரான பெய்னியின் கிரிக்கெட் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக கீப்பர் டிம் பெய்னி தெரிவு செய்யப்பட்டார்.
போட்ட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது போது சாத் சாயர்ஸ் வீசிய பந்தை குவிண்டன் டி காக் அடித்த போது, அது அவுட் சைட் எட்ஜ் ஆகி பெய்னியின் விரலை பதம் பார்த்தது.
இதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவருக்கு வலது கட்டை விரல் எலும்பு மெல்லிதாக முறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கீப்பிங் செய்ய தடுமாறியதோடு, துடுப்பாட்டத்திலும் சிரமப்பட்டார். ஆனால் நிதானமாக ஆடி 62 ஓட்டங்கள் குவித்தார்.
இந்நிலையில் அங்கிருக்கும் ஊடகங்கள், 2010-ஆம் ஆண்டில் விளையாடிய போது டிர்க் நன்னீஸ் வீசிய 148 கி.மீற்றர் வேக பந்தால் அவருக்கு கை விரல்கள் முறிந்தன.
தற்போது மீண்டும் அடிபட்டுள்ளதால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டதாக தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது