Loading...
இலங்கையின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் மேயராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மதுர வித்தானகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தன கோட்டே மாநகர சபைக்கான மேயர் தெரிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
Loading...
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த மருத வித்தானகே 23 வாக்குகளை பெற்ற நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் சந்திம நயனஜித்திற்கு வெறும் 11 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது.
வாக்களிப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு, மஹிந்தவின் பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...