பொகவந்தலாவ தெரேசியா தோட்ட ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா எதிர் வரும் 13ம் திகதி ஆரம்பிக்கபட விருக்கின்ற வேளையில், தெரேசிய தொட்ட ஆலயத்தின் தலைவர் வீட்டில் வைக்கபட்டிருந்த 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் 01.04.2018. ஞாயிற்று கிழமை இனந் தெரியதாவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 02.04.2018 திங்கள் கிழமை காலை வேளையில், பொகந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, எதிர் வரும் 13ம் திகதி ஆரம்பிக்கபடவிருக்கின்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா செலவிற்கான பணம், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபா ஆலய தலைவரிடம் இருந்த வேளையில், அந்த பணத்தினை தனது வீட்டில் உள்ள அலுமாரி ஒன்றில் வைத்துள்ளதாகவும், அவரின் வீட்டில் எவரும் இல்லதா வேளையில், குறித்த பணம் இனந்தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது .
இதேவேளை கொள்ளையிட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணத்தில், ஒரு லட்சம் ரூபா பணத்தினை ஆலய தலைவரின் வீட்டின் முன்பு கொண்டு வந்து போட்டு வீட்டு சென்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.