பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இளம் இசையமைப்பாளராக 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம்வருபவர் அனிருத். குறைந்த நாட்களிலே அஜித், விஜய் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிருத் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத், “ஓபன் பன்னா” குழுவின் தயாரிப்பில் உருவாக உள்ள “இங்கதான் ட்விஸ்டு” வெப் சீரிஸில் கதநாயகனாக நடிக்க உள்ளார். இதுகுறித்து வெப் சீரிஸின் தயாரிப்பாளர் அபிஷேக் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அனிருத், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் “கோலமாவு கோகிலா” திரைப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.