பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார்.
தற்போது அகாதா, அபர்ணதி, சுசானா, சீதாலட்சுமி, நவீனா, சுவேதா என 6 மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த 6 பெண்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த பெண்ணாக இருப்பது அபர்ணதி தான். இவர் நடிக்கவில்லை என்றும், மிகவும் உண்மையாக மனதில் பட்டத்தை பேசுபவர் என்றும் கூறி வரும் ரசிகர்களுக்கு இவரை பற்றி இது வரை தெரியாத விஷயம் இதோ.! அபர்ணதிக்கு நடிக்க தெரியாது என்று பலர் கூற நாம் கேட்டது உண்டு. ஆனால் இவருக்கும் அருமையாக நடிக்க தெரியும் என்பதே உண்மை.
ஆம், இவர் coffee with kanmani என்று ஒரு குறும்படத்தில் அருமையாக நடித்துள்ளார். இந்த குறும்பட வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் ஒருவருக்கு மனைவியாக நடித்துள்ளார் அபர்ணதி. இதன் மூலம் இவருக்கும் நடிக்கத்தெரியும் என்பது உறுதியாவதால், இவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.