02-04-2018 திங்கட்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ஹேவிளம்பி வருடம்,பங்குனி மாதம்19ம்திகதி,ரஜப் 14ம் திகதி,2.4.18 திங்கட்கிழமை தேய்பிறை,
துவிதியை திதி மாலை 5:54 வரைஅதன் பின் திரிதியை திதி, சித்திரை நட்சத்திரம் காலை 6:48 வரைஅதன்பின்; சுவாதி நட்சத்திரம், சித்த,அமிர்தயோகம்.
நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
குளிகை : மதியம் 1:30-3:00 மணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : சிவன் வழிபாடு. கரிநாள்
மேஷம்:
மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய மூலதனம் அதிகம் தேவைப்படும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க கூடாது.
ரிஷபம்:
பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டு, வெகுமதி பெறுவர்.
மிதுனம்:
தாமதமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனைவி, குழந்தைகளின் அன்பை பெற்று மகிழ்வீர்கள்.
கடகம்:
வெளி வட்டார தொடர்பால் பிரச்னை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். வெளியூர் பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படும்.
சிம்மம்:
எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிடும். லாபம் சுமார். பெணகள் வீட்டுச் செலவுக்கு பணமின்றி திண்டாட நேரிடலாம்.
கன்னி:
எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
துலாம்:
சிலரது அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிட்டாலும் லாபம் குறைாயது. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை தவறாமல் பின்பற்றவும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
விருச்சிகம்:
மனதில் நல்லெண்ணம் அதிகரிக்கும். அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர்.
தனுசு :
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சேமிப்பு கூடும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். நண்பரால் நன்மை உண்டாகும்.
மகரம்:
பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணியாற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேர வாய்ப்புண்டு.
கும்பம் :
திட்டமிட்ட பணிகள் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
மீனம்:
உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சி தேவைப்படும். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வது கூடாது. வாகனப் பயணத்தில் மிதவேகம் கடைபிடிக்கவும்.