Loading...
ரணிலுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளது என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
Loading...
கட்சிக்குள் தற்போது தோற்றம் பெற்றுள்ள கருத்தொற்றுமை இன்மையே இதற்கு முக்கிய காரணியாக காணப்படுகின்றது என்றும் அவர கூறியுள்ளார்.
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தமது அரசியல் நோக்கங்களை காரணம் காட்டாமல் சாதாரண குடிமக்கள் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...