தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆதரவு வழங்குகின்றார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பசில் ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்காமல் இருப்பதற்கான நிலையப்பாட்டிலேயே பசில் உள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் இரண்டு வருட காலங்களுக்குள் ரணில் விக்ரமசிங்க அரசை நடத்தி செல்ல சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
அதன் ஊடாகத் ரணில் மீதான மக்கள் எதிர்ப்பு மேலும் அதிகரித்து அடுத்த தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி பெரும் வெற்றியை பெறும் என பசில் எதிர்பார்க்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இதுவரையிலும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கையொப்பமிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.