தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கிராமத்து ஸ்டைலில் நண்டு மசாலா செய்தால் அருமையாக இருக்கும். இன்று நண்டு மசாலா செய்முறையை பார்க்கலாம்.
கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா
தேவையான பொருட்கள் :
நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1
ஏலக்காய் – 4
சோம்பு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 1/2 கப்
சோம்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 5
செய்முறை :
நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் துருவிய தேங்காய், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்..
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.
நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா ரெடி!!