தன்னுடன் பாடசாலையில் பயிலும் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவியை அண்ணன், தம்பி உள்பட 6 பேர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழகம், தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், அவருடன் பாடசாலையில் கற்கும் நண்பருடன் ஆற்றங்கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த நபரொருவர் மாணவியின் நண்பனை அடித்து விரட்டிவிட்டு, மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியோடு. பின்னர் குறித்த நபர், தனது நண்பனை தொலைபேசி ஊடாக அழைத்ததோடு, பின்னர் அவரது தம்பி உட்பட மொத்தம் 6 பேர் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்ட சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்ததோடு. மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.