சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலை பார்வையிட, நமால் ராஜபக்ஷ மொஸ்கோ சென்றிருந்தார். மொஸ்கோவில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஹூயூஸ்டன் நகருக்கு அவர் செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்கான பயண பறிமாற்ற விசா(ரிரான்சிட் விசா) அவர் பெற்றிருந்தார். இருப்பினும் எமரேட்ஸ் விமானம் அவரை, அமெரிக்கா அழைத்துச் செல்ல மறுத்துவிட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் கொடுத்த தகவலை அடுத்தே எமரேட்ஸ் விமானம் அவரை அமெரிக்கா அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தேர்தல் தொடர்பான 2 ஆலோசனைக் கூட்டங்களிலும் இலங்கை எதிர்க்கட்சி எம்.பியாக இருக்கும் நமல் கலந்துகொண்டார். இது அமெரிக்காவை மேலும் சினம் கொள்ள வைத்துள்ளது என்கிறார்கள். அமெரிக்கத் தூதரகத்தின் அறிவுறுத்தலின்படியே இந்த நடவடிக்கை எடுத்ததாக எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க தூதரகம் இது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என்று நமால் தற்போது கோரி வருகிறார்.
ஆனால் எந்த ஒரு விளக்கத்தையும் அமெரிக்க அதிகாரிகள் இதுவரை கொடுக்கவே இல்லை. ரஷ்யாவோடு அமெரிக்க , பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் முறுகல் நிலையில் உள்ள இந்த வேளை. ரஷ்யா சென்று தேர்தலை கண்காணித்துள்ளார் நமால். இது பல மேற்குலக நாடுகளை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.