அனைத்தும் இயந்திர வசமாகிறது என்று ஒரு பக்கம் மக்கள்குறை கூறி கொண்டேனா இருந்தாலும்,சில நேரங்களில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்கிறது.அந்த விதத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் புதிய தொழில்நுட்பத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் எனப்படும் விமான பயண அனுமதி ஆவணங்களை பயோமெட்ரிக் எனப்படும் உடல் அங்க அடையாளங்களை கொண்டு அளவிடும் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுக படுத்த பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் படி,தாள்களில் அச்சடித்த போர்டிங் பாஸ்ஸினை கையில் எடுத்து செல்ல வேண்டாம்,மாறாக இந்த சரி பார்க்கும் இயந்திரத்தின் முன் சென்று நின்றாலே போதும்,அந்த இயந்திரம் உங்கள் முகத்தினை ஸ்கேன் செய்து,உங்கள் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு,சரியாக இருப்பின் தானியங்கி கதவுகள் திறந்து வழி விடுகிறது.சர்வதேச விமான பயணத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.