ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் பெரியவர்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில் மர அலமாரி ஒன்றை ஒரு குழந்தை திறக்க முயல, அந்த அலமாரி அப்படியே சரிந்து விழும் வீடியோ ஒன்று பெற்றோருக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை சொல்லுகிறது.
அந்தக் குழந்தை அலமாரியின் ட்ராக்களை ஒவ்வொன்றாகத் திறக்கிறான்.
எதிர்பாராத நிலையில் அந்த அலமாரி அப்படியே முன்னோக்கி சாய்கிறது.
அதிருஷ்டவசமாக சட்டென்று அந்தக் குழந்தை நூலிழையில் விலகிக் கொள்கிறான். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
பயந்து போன அந்தக் குழந்தை தனது இன்னொரு சகோதரனுடன் போய் உட்கார்ந்து கொள்கிறான்.
சத்தம் கேட்டு ஓடி வரும் தாய் தனது குழந்தைக்கு ஏதாவது அடி பட்டிருக்கிறதா என்று பார்க்கிறார்.
நல்ல வேளையாக அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை.
இந்த வீடியோ பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியைச் சொல்லியுள்ளது.
ஒன்றில் குழந்தைகளை தனியே விடக்கூடாது.
அல்லது இம்மாதிரியான மரச்சாமான்களை சுவருடன் சேர்த்து அசையாதபடி ஸ்க்ரூ ஆணிகள் உதவியுடன் பொருத்த வேண்டும்.
அப்படிச் செய்வதன்மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் என்பதை இந்த வீடியோ நமக்கு சொல்லாமல் சொல்லித்தருகிறது.