பொகவந்தலாவை ஜேப்பல்டன் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் நான்கு பேரும் இன்று (04.04.2018) புதன் கிழமை பிற்பகல் 02.30 மணி அளவில் கைது செய்யபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
பொகவந்தலாவ ஜேப்பஸ்டன் தோட்டப் பகுதியில் கடந்த காலங்களில் தேசிய இரத்தினகால் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையினால் அனுமதிவழங்கபட்ட இடத்தில் இந்த நான்கு சந்தேக நபர்களும் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்பொழுது சுமார் ஒரு வருடகாலமாக குறித்த பகுதியில் தேசிய இரத்தின கல் மற்றும் தங்க ஆபரனங்கள் அதிகார சபையினால் அனுமதியினை இடைநிறுத்தியதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்த பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளதாகவும், கைது செய்யப் பட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலாவ ஜேப்பஸ்டன் டி.பி.தோட்டபகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் நான்கு பேருக்கும் இன்று புதன் கிழமை பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் பினை வழங்கபட்டு 24.04.2018. செவ்வாய் கிழமை ஹட்டன் நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு பொகவந்தலாவ பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.