தேர்தல் முடிவுகள் வௌிவந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால், ஈபிடிபி என்ற பேச்சே எழுந்திருக்காது.
மேலும் துரோகிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதைவிட ஆட்சியமைக்காமல் விடுவதே சிறப்பு எனக் கூறிவருகின்ற முன்னணி, கூட்டமைப்பும் ஈபிடிபியும் இணைந்து செயற்படுவதை ஒரு பிரச்சினைக்குரிய விவகாரமாக மாற்றப் பார்க்கின்றது.
தமிழ் மண்ணில் சிங்களக் கட்சிகள் ஆட்சியமைக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படாதெனத் தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான வி. மணிவண்ணன், இங்கு ஆட்சியமைப்பதற்கு தமிழ்க்கட்சிகளுக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதாகவும், தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைக் காலம் கடந்த ஒன்றாகவும், உள்நோக்கம் கொண்ட ஒன்றாகவும் கருத முடிகின்றது.
கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்தும் பெரும்பான்மை பலம் கிட்டவில்லை
உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் உள்ள அநேகமான சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஆனால் புதிய உள்ளூராட்சித் தேர்தல் நடைமுறை காரணமாக கூட்டமைப்பால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறமுடியவில்லை. அதே போன்று சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறையில் முன்னணிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்த போதிலும், கூட்டணியில் ஆட்சியமைக்க முடியவில்லை. இந்த நிலையில் கூட்டமைப்பும், முன்னிணியும் இணைந்து செயற்படுமென்ற நம்பிக்கை மக்களிடம் காணப்பட்டது.
ஆனால் ஈபிடிபியின் மறைமுக ஆதரவுடன் கூட்டமைப்பு ஆட்சியமைக்க வேண்டிய நிலையொன்று உருவானது. இது கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமானதெனப் பலராலும் விமர்சிக் கப்பட்டது.கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களும் இதனை விரும்பவில்லை. அந்தப் பக்கமிருந்தும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மாவை சேனாதிராசா உட்பட கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஈபிடிபியுடன் தாம் கூட்டுச் சேரவில்லையெனத் திரும்பத் திரும்பக் கூறுமளவுக்கு நிலைமை அவர்களுக்குச் சங்கடமானதாக அமைந்துவிட்டது.
தற்போது முன்னணியின் புதிய அறிவிப்பைக் காலம் கடந்த ஒன்றாகவே கருத முடிகின்றது. கூட்டமைப்பை விமர்சிப்பதில் முன்னணி எப்போதுமே தயங்கியதில்லை. சீ.வி. விக்னேஸ்வரனின் மறைமுக ஆசீர்வாதமும் அதற்கு உண்டு என்பதால், கூட்ட மைப்பை எந்த வகையிலாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதே அதன் முக்கிய குறிக்கோளாகக் காணப்பட்டது.
ஆட்சியமைப்பதில் கூட்டமைப்பும், ஈபிடிபியும் ஒன்றுபட்டமை முன்னணிக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட ஈபிடிபியின் தயவை கூட்டமைப்பு நாடியமை மிகப்பெரிய தவறென விமர்சனம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக் கது. இனிமேல் மேடைகள் தோறும் இந்த விவகாரமே முன்னிலை வகிக்கப் போகின்றது.
இதே வேளை வவுனியா வடக்கு மற்றும் கரவெட்டிப் பிரதேச சபைகளில் கூட்டமைப்பு ஆட்சியை அமைப்பதற்கு ஏதுவாக முன்னணி ஆதரவு வழங்குமெனத் தெரிவித்துள்ளதை உள்நோக்கம் கொண்டதெனவே கருதமுடிகின்றது.
தேர்தல் முடிவுகளையடுத்து மதில் மேல் பூனைகளான தமிழ்க் கட்சிகள்
தேர்தல் முடிவுகள் வௌிவந்தவுடன் கூட்டமைப்பும், முன்னணியும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் ஈபிடிபி என்ற பேச்சே எழுந்திருக்காது. மேலும் துரோகிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதைவிட ஆட்சியமைக்காமல் விடுவதே சிறப்பு எனக் கூறிவருகின்ற முன்னணி, கூட்டமைப்பும், ஈபிடிபியும் இணைந்து செயற்படுவதை ஒரு பிரச்சினைக்குரிய விவகாரமாக மாற்றப் பார்க்கின்றது என்பதை இப்போதே எதிர்வு கூறிவிட முடியும்.
மாகாணசபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியிடுவதற்கான சாத்தியம் அதிக அளவில் காணப்படுகின்றது. முன்னணியின் ஆதரவு அவருக்கு நிச்சயமாகக் கிடைக்கப் போகின்றது. கூட்டமைப்பி லிருந்து விக்னேஸ்வரன் விலகிநிற்பதற்கு இதுவொரு பிரதான காரணமாகும்.
தமிழரசுக் கட்சியோ அல்லது கூட்டமைப்போ தம்மை ஆதரிக்கப் போவதில்லையென்பதை நன்குணர்ந்து கொண்ட அவர், இப்போதே கூட்டமைப்புக்கு எதிரானவர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். தமிழ் மக்கள் பேரவையைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடுவதும், முன்னணியுடன் நெருக்கமான மறைமுக ஆதரவைப் பேணிவருவதும், அவ்வப்போது தமிழரசுக் கட்சியையும், கூட்டமைப்பை யும் கண்டித்து அறிக்கை வௌியிடுவதும் இதற்காகத்தான் என்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்வார்கள்.
தனது வாக்குவங்கி அதிகரிப்பு குறித்து மகிழ்ச்சியடைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த மக் கள் ஆதரவு, முன்னணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதன் வாக்கு வங்கியில் ஏற்பட்ட அதிகரிப்புக் கண்டு முன்னணியின் தலைவர்கள் வியப்படைந்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குகளே கிடைத்ததால் துவண்டு போயிருந்த முன்னணியினருக்கு, உள்ளூராட்சித் தேர்தல் புது இரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது. கூட்டமைப் பினர் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டபோதிலும், தனித்து ஆட்சியமைக்க முடியாமல் திணறியது கண்டு முன்னணித் தலைவர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.
தற்போது வவுனியா வடக்கிலும், கரவெட்டியிலும் ஆதரவு தெரிவிக்க அவர்கள் முன்வந்துள்ளமை ஓர் அரசியல் நாடகம் என்றே கூற வேண்டும்.
கூட்டமைப்புத் தலைவர்கள் ஆளுக்கொரு அறிக்கையை வௌியிட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, உண்மையான நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
இல்லை யேல் மக்கள் கூட்டமைப்புத் தொடர்பாகத் தவறான எண்ணத்தையே கொண்டிருப் பார்கள். இதைவிட முன்னணியின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆழ்ந்து யோசித்து உரிய முடிவை கூட்டமைப்பு। எட்டவேண்டும்.