அரசுடன் ஒத்துழைத்துப் பணியாற்ற விரும்பும் அனைவருடனும் இணைந்து, புதிய அரசியல் பயணமொன்றைத் தொடருவேன் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்கவை வரவேற்கும் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டமைக்கு நன்றி. எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், ஐ.தே.கவில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய முகங்களை முன்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது அரசியல் பயணத்தைத் தொடர்வதற்காக, புதிய நம்பிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையினூடாக, புதிய பயணத்தை, மிக இலகுவாகத் தொடர முடியும். என்றார்.