நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்யவுள்ளார் இலங்கை பெண் சுசானா தான் ஆர்யாவின் மனதில் முதல் இடத்தில் உள்ளார் என்பதை நேற்றைய தினம் அவரே கூறியுள்ளார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 5 பெண்களின் வீட்டுக்கும் ஆர்யா சென்றுள்ளார்.
அது மட்டும் இல்லை, எல்லோருக்கும் ஒரு அழகிய தருணம் ஆர்யாவுடன், ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இதன்போது, அகாதாவிற்கு மறக்க முடியாத பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலுக்கு அழைத்து சென்று மறக்க முடியாத பரிசு கொடுத்துள்ளார்.
இன்ப அதிர்ச்சியில் அகாதா ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை பெண் சுசானா முதல் இடத்தில் இருப்பதாக ஆர்யா கூறியதால் அவரைதான் திருமணம் செய்வார் என்று பார்வையாளர்களினால் எதிர் பார்க்கப்படுகிறது.