ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டி என்பது ஒரு பெரிய வியாபாராம் ஆகும்.
மார்கெட்டிங், மொடல்கள், பிரபலங்கள் என அனைவரையும் முன்னிலைப்படுத்தி ஐபிஎல்லை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள்.
ரசிகர்களும் ஐபிஎல் டிக்கெட்டின் விலை எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை, ஐபிஎல் தொடரை காண குவிந்துவிடுவார்கள். மேலும் ஐபிஎல் போட்டியின் மூலம் தொலைக்காட்சியும் தங்கள் பங்குக்கு லாபம் ஈட்டிவிடுவார்கள்.
மேலும், வீரர்களும் தங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பதற்காக, சிக்சர்களை தெறிக்கவிடுவதில் முனைப்பாக இருப்பார்கள்.
ஐபிஎல் தொடரில் விளையாட்டின் ஆக்ரோஷத்திற்கு இணையாக, கவர்ச்சியும் இருக்கிறது.
முத்தமிட்டுக்கொள்வது,கட்டியணைப்பது என விளையாட்டு மைதானத்தில் வைத்து பல ருசிகரங்களும் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளிக்கும்.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த முத்தகாட்சிகள்
சித்தார்த் மல்லையா – தீபிகா படுகோனே
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவும், பிரபல பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோனே 2010-11ம் ஆண்டுகளில் மிக நெருக்கமாக பழகி வந்தனர்.
ஒருமுறை தங்கள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் வெற்றிப் பெற்றதை இவர்கள் கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த காட்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.
ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் களம் புகுவதற்கு முன்னர், தனது ஆசை காதல் மனைவிக்கு தலையில் பாசமுடன் முத்தமிட்டு ரோஹித் ஷர்மா சென்றார்.
ப்ரீத்தி ஜிந்தா- யுவராஜ்
தனது பிஸ்னஸ் பார்ட்னர் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியுன் துணை உரிமையாளருமான நெஸ் வாடியாவுடன் ப்ரீத்தி முத்தமிட்டுக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். பின்னர் தனது அணியில் விளையாடிய யுவராஜ் சிங்குடன், ப்ரீத்தி நெருங்கி பழகியதாக கூறப்பட்டது.
காதலித்து வந்தனர் என்று வதந்திகள் பரவிய காலக்கட்டத்தில் யுவராஜை கட்டியணைத்து ப்ரீத்தி முத்தமிட்டார்.
ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், நடிகை ரவீனா டான்டனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஒரு ஐபிஎல் போட்டிக்கு நடுவே முத்தமிட்டுக் கொண்ட காட்சி கமெரா கண்களில் சிக்கின.