Loading...
பிரபல வில்லன் நடிகர் கொல்லம் அஜீத்(56) இன்று அதிகாலை மரணமடைந்தார். மலையாளத்தில் 90களில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் ஆவார்.
இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களில் நடித்துள்ளார். சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், கடந்த சில மாதங்களாக வயிற்றுப் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.40 மணிக்கு மரணமடைந்தார்.
Loading...
இவரது உடலுக்கு மலையாள நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த கொல்லம் அஜீத்துக்கு பிரமீளா என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும், ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளனர்.
Loading...