கனடாவின் மாண்ட்ரீல் நகரம், கோடை காலத்தில் புகலிடம் கோருபவர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், அவர்களை வரவேற்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு கனடாவில் புகலிடம் கோரி குடியேறியவர்களுக்காக, மாண்ட்ரீல் நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானம் வசிப்பதற்கு ஏற்றவாறு மாற்றி தரப்பட்டது.
ஆனால், தற்போது அந்த மைதானத்தில் புகலிடம் கோரி வருபவர்களுக்கு அனுமதி அளிக்க, மைதான அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, புகலிடம் தேடி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே ஆகும் என கூறப்படுகிறது.
எனினும், மைதானத்தைத் தவிர்த்து புகலிடம் கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வரும் மக்களை தாங்கள் வரவேற்பதாகவும், நகர நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் Magda Popeanu தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் 1,458 பேரும், பிப்ரவரி மாதத்தில் 1,486 பேரும் கனடாவின் எல்லையில் நுழைந்துள்ளனர். ஆனால், மார்ச் மாதத்தில் எவ்வளவு பேர் நுழைந்துள்ளனர் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.