புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பம்போல் செய்தொழிலை மாற்றியமைப்பீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும்.
சிலர் செய்தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவார்கள். குழந்தைகளின் கல்விக்காக மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள். அவர்களால் குடும்பத்தின் அந்தஸ்து உயரும்.
பணவரவு எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே வரும். இல்லத்தில் சந்தான பாக்கியம் உண்டாகும் தீர்க்கமாக சிந்தித்து சிறப்பாக முடிவெடுப்பீர்கள்.
உங்கள் முயற்சிகள் எதுவும் வீண் போகாது. சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய நவீன வாகனங்களை வாங்குவார்கள். நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் இணைந்து காரியமாற்றுவீர்கள்.
உங்கள் எண்ணங்களை செய்தொழிலில் நடைமுறைப்படுத்துவீர்கள். அதனால் உண்டாகும் நற்பலன்களை கண்கூடாகவும் பார்ப்பீர்கள்.
கைவசம் உள்ள பொருள்களை செம்மைப்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சிறிது பகைமை, விரோதம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எவரிடமும் எதிர்வாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து மாற்றங்கள் உண்டாகி அதன்வழியே நல்ல செல்வம், செல்வாக்கு ஆகியவை பெறுவதற்கு வழி உண்டாகும். நெடுநாளாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.
மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொண்டவர்கள் சுயமாக செயல்படத் தொடங்குவார்கள். தாமாகவே நல்ல முடிவுகள் எடுத்து சிறப்பாக வெற்றிபெறுவீர்கள்.
இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுலபமாக நடந்தேறிவிடும். மனதிற்கினிய பிரயாணங்களைச் செய்து அதன்மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
இல்லத்தில் முத்தான புத்திரப் பேறு உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவதற்கும் புனிதமான தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதற்கும் தகுந்த காலகட்டமாக அமைகிறது.
வெளிநாடு சென்று வர முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைத்துவிடும். உங்களின் உள் உணர்வு சிறப்பாக வேலைசெய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். மேலும் உடலில் சிறிது சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும்.
வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபங்கள் வரும். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்பிவராமல் தங்கிவிட நேருமாகையால் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம்.
விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, கால்நடை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப் படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல்ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்களைச் செய்வீர்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். உடல்சோர்வும் சில நேரங்களில் உண்டாகும்.
மாணவமணிகள் பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்படையுங்கள்.