ஸ்ருதி ஹாசன் பிரபலமான திறமையுள்ள நடிகை. பாடுவது மற்றும் நடிப்பது இரண்டுமே திறமையாக செய்வார். காதல் கிசுகிசுக்களிலும் இவர் சில சமயங்களில் சிக்கியுள்ளார். தன் இயல்பான நடவடிக்கையால், பேச்சுகளால் சில நேரங்களில் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நீண்ட நாட்களாக தன் நண்பர் மைக்கேல்லை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.
அதை உறுதி படுத்தும் விதமாக ஸ்ருதி பல இடங்களுக்கு அவரது காதலனுடன் தான் சென்று வருகிறார். இவர்களின் திருமணத்திற்கு கமல் மற்றும் சரிகா சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போது சபாஷ் நாயுடு படத்தை தவிர்த்து இவருக்கு பட வாய்ப்பும் இல்லை. ஹிந்தியில் ஒரு படத்தில் மட்டும் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் தேடி வரும் படங்களில் கூட நடிக்க மறுக்கிறார்.
தற்போது இவர் திருமணத்திற்கு தயாராகிறார் என்றும், திருமணத்திற்கு பிறகு நடிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் கிடைக்கும் நல்ல படங்களில் கூட ஒப்பந்தமாக மறுக்கிறார் ஸ்ருதி. அண்மையில் கூட விக்ரம் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.