யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் இந்துக்கல்லூரி வளாகத்தில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடத்தை கடந்த 04 ஆம் இரவு தாக்கி உடைத்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அதிரடியான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்து விசாரித்தனர்.
இன்றையதினம் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதியின் வாசல் தலத்தில் ஆஐர் படுத்தினர்.
இதன்போது குறித்த வழக்கினை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் சந்தேக நபர்களை சாவகச்சேரி மாவட்ட பதில் நீதவான் எஸ் கணபதிப்பிள்ளை பிணையில் விடுதலை செய்தார்.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த வருடம் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியருடன் தகராற்றில் ஈடுபட்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.