Loading...
டெமடோல் ரக போதை மாத்திரையினை கைவசம் வைத்திருந்த ஆனமடுவ பிரதேச பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பாடசாலை அதிபருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மாணவர்களை பரிசோதனை செய்த போது அவர்களிடம் போதை மாத்திரை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...
சந்தேக நபர்களான மாணவர்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு போதை பொருளை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
17 மற்றும் 18 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Loading...