தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகர்-நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் பாணியில், தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் உருவாக்கி இருக்கும் ஸ்ரீலீக்ஸ், நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தி தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
முதலில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலு பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் நடிகர் ஒருவரைப் பற்றி கூறி, அவர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். யாரையும் உணர்வுப்பூர்வமாக அணுகி சிக்க வைப்பார். மக்கள் முன் நாடகமாட தெரிந்தவர். தவறான நடத்தைகள் உள்ளவர். பல பெண்களை படுக்கையில் பயன்படுத்தி உள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் சங்கம் தனக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீ ரெட்டி தனது ஆடைடைகளை களைந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீ ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.