தமிழ்- –சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் முன்கூட்டியே நாளை 09ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்கள் நாளைய தினம் சம்பளம் பெறவுள்ளனர்.
அரசாங்க உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகை முற்பணமாக ரூபா 10 ஆயிரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட பண்டிகை முற்பணம் வட்டியற்ற 8 சமபங்கு மாதங்களில் மீள அறவிடப்படவுள்ளது.
இதேவேளை, தமிழ்– சிங்கள புத்தாண்டையொட்டி நாடளாவிய ரீதியில் விஷேட பஸ், புகையிரத போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புத்தாண்டுக்கு முன்னரும், புத்தாண்டைத் தொடர்ந்துவரும் நாட்களிலும் பொதுமக்கள் இலகுவாக போக்குவரத்துச் செய்யும் பொருட்டு, விஷேட பஸ், புகையிரத போக்குவரத்து ஏற்பாடுகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.