ஐபிஎல் 3-வது ஆட்டத்தில் சுனில் நரேனின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.
ஐபிஎல் 11-வது சீசனின் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி, மெக்கலமுடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மெக்கல்லம் நரேன் பந்தில் போல்டாகி வேளியேறினார்.
அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 23 பந்தில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். விராட் கோலி 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா அணி சார்பில் வினய் குமார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேனும் கிரிஸ் லின்னும் இறங்கினர். ஆட்டத்தின் 2வது ஒவரில் கிறிஸ் லின் 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.
சுனில் நரேன் தனது அதிரடியை ஆரம்பித்தார். அவர் 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து நிதிஷ் ரானா இறங்கினார். உத்தப்பா 12 ரன்களில் வெலியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
நிதிஷ் ரானாவும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் 55 ரன் ஜோடி சேர்த்த நிலையில், நிதிஷ் ரானா 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரிங்கு 6 ரன்னில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார், அவர் 9 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய வினய்குமாருடன் சேர்ந்து தினேஷ் கார்த்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 35 ரன்களுடனும், வினய்குமார் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் கிரிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.