தில்லியின் புறநகரில் காருக்குள் செக்ஸ் வைத்த இளம் ஜோடி, பக்கத்து வீட்டு பாட்டியால் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.
தில்லியின் புறநகரான குருகிராம் பகுதியில் 52 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு வெளியே புதன்கிழமை அதிகாலை யாரோ சத்தம் போடுவது கேட்டுள்ளது.
இதனால் என்னவென்று பார்ப்பதற்காக காலை 5 மணி அளவில் கதவை திறந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் மொத்தமும் அமைதியாக இருந்தது. சுற்றுப்புறங்கள் மிக நிசப்தமாக இருந்தது. ஆனால் பக்கத்து வீட்டு பெண்ணின் (26 வயது) காரில் இருந்து முணுமுணுப்புடன் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அந்த மூதாட்டி காரை நோக்கி சென்றுள்ளார். காருக்குள் யார் என்று பார்ப்பதற்காக, காரின் கதவை திறந்து பார்த்தார். அங்கு பக்கத்துவீட்டு இளம் பெண் மற்றும் ஒரு இளைஞன் நிர்வாண நிலையில், உறவு வைத்துக்கொண்டு கிடந்துள்ளார்கள். அவர்களுக்கு பக்கத்தில் பாதி மதுபாட்டில்களும், சிப்ஸ் பாக்கெட்டும் இருந்துள்ளது. இதை கண்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அந்த இளம்பெண் மூதாட்டியை திட்டியுள்ளார். அந்த இளைஞனும் பாட்டியை பிடித்து இழுத்து, நீயும் எங்களுடன் சேர்ந்து கொள்கிறாயா என்ற கேட்டுள்ளான்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து அதிர்ச்சியுடன் வீட்டுக்குள் வந்த மூதாட்டி, போலீஸ்க்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 26 வயது பெண் மற்றும் 20 வயது இளைஞனை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
தொடர்ந்து அந்த இளம் ஜோடி மீது பொதுஇடத்தில் மது அருந்திவிட்டு, அநாகரீகமாக நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர். பெண்ணை மட்டும் உடனடியாக ஜாமினில் விடுவித்தனர்.
அந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 20 வயது இளைஞன், தில்லியின் நஜப்கார்க் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும். 12 ம் வகுப்பு படித்து வரும் மாணவன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.