ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சென்னையில் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த பிரச்சினை தீரும் வரை சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்று சில அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சில பிரபலங்களும், சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு இது உகந்த சூழல் அல்ல, இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் நாளை மறுதினம் சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சென்னையில் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையில் முதல் ஆட்டத்தில் வெற்றியை ருசித்த கையோடு, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று மாலை சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட வீரர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஓட்டல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.